தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 29, 2020, 4:56 PM IST

ETV Bharat / state

பிராமணர்களை கலாய்த்தால் எதிர்க்க நான் வருவேன்! - வேலூர் இப்ராஹிம்

சேலம் : பிராமண சமுதாயத்தினரை இழிவாக சித்தரிக்கும் வெப்சீரிஸை தடை செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

I will come to support the Brahmins - Vellore Ibrahim
பிராமணர்களை கலாய்த்தால் எதிர்க்க நான் வருவேன்! - வேலூர் இப்ராஹிம்

இது தொடர்பாக சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம் கூறுகையில்,“இறை ரீதியாக மத ரீதியாக பிளவு படுத்தும் நோக்கில் தமிழ்நாட்டில் தற்போது அரசியல் தலைவர்களை, பிராமண சமுதாய மக்களை விமர்சிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கில் தொலைக்காட்சி தொடர் ஒன்று ஒளிபரப்பாக உள்ளதாக காட்சிகள் வெளியாகி வருகின்றன. தனியார் தொலைக்காட்சி பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை, கேலி செய்யும் காட்சிகளை ஒளிபரப்பியதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் அமைப்பு , அந்த தொலைக்காட்சி அலுவலகம் முன்பு பிராமணர்களுக்கு ஆதரவாகப் பெரும் அளவில் போராட்டத்தை நடத்தும்.

பிராமணர்களை கலாய்த்தால் எதிர்க்க நான் வருவேன்! - வேலூர் இப்ராஹிம்
இதனை தமிழ் நாடு ஏகத்துவ ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று அவர்களை தீவிரவாதத்தை நோக்கி இங்குள்ள இஸ்லாமிய கட்சிகள் அழைத்துச் செல்கின்றன. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் போன்ற தலைவர்கள் இதே வேலையைத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு நான் சவால் விடுகிறேன். இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவர் நின்று தேர்தலில் நின்று வெற்றி பெற்று காட்டுவாரா?. இஸ்லாமியராக இருந்தாலும் உணர்வால் இந்தியராக இருக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து செயல்படுவதில்லை" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details