தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு கலை கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை மனு

வேலூர்: மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் அரசு கலை கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

By

Published : Feb 6, 2021, 11:34 AM IST

அரசு கலை கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் மனு
அரசு கலை கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் மனு

தமிழ்நாட்டில் 42 அரசு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை கடந்த 2019, 2020ஆம் ஆண்டுகளில் அரசு, கல்லூரிகளாக மாற்றியது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், "கல்லூரிகளில் பணியாற்றிய கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பணிமூப்பு சிறப்புத் தேர்வில் பங்கேற்க அரசு அனுமதித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10-15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் பாதிக்கப்படுவோம். ஆகவே பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களைச் சிறப்புத்தேர்வில் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

அரசு கலை கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் மனு

பணி அனுபவம் வழங்குவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க வேண்டும். பணி நிரந்தரத்தில் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாஜக கல்யாண ராமனை கைது செய்க' - இஸ்லாமிய அமைப்பினர் புகார் மனு

ABOUT THE AUTHOR

...view details