தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெகிழி பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.11,000 அபராதம்

வேலூர்: நாட்றம்பள்ளியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு நெகிழிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

நாட்றாம்பள்ளியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
நாட்றாம்பள்ளியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

By

Published : Jan 29, 2020, 9:18 AM IST

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் அனைத்தையும் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் நாட்றம்பள்ளி அருகேயுள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த நெகிழி பொருட்களையும் பறிமுதல் செய்து நாட்றம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

நாட்றாம்பள்ளியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

மேலும் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை விற்பனை செய்து வந்த வியாபரிகளுக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த திடீர் சோதனை அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:

பட்ஜெட் 2020: தமிழ்நாடு மக்களின் எதிர்ப்பார்ப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details