திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பாங்கிஷாப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காலனி உதிரி பாகங்களைச் சேகரித்து வைத்திருந்த குடோன் ஒன்று உள்ளது. இதில் நேற்றிரவு திடீரென தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.
இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு வாகனம் பழுதாகி நின்றதால், வாகனத்தை பொதுமக்கள் தள்ளிச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க முடியாமல் போராடி அணைத்தனர்.
ஆம்பூர் குடோனில் தீ விபத்து இந்த தீ விபத்தில் காலனி தாயரிக்க பயன்படும் ஷீலேஸ், காலனி உதிரி பாகங்கள், ரசாயனங்கள் எனப் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க..டிக் டாக் செயலிக்கு எதிர்ப்பு!