2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரதான கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவிற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உபரியாக இருக்கும் மாவட்டங்களில் இருந்து, மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உபரியாக இருந்த ஆயிரத்து 140 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று (நவ. 27) தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.