தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலம் அமைப்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு!

வேலூர்: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் காங்கேயநல்லூர் பாலாற்றுப் பாலம் அமைப்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வுமேற்கொண்டார்.

dro
dro

By

Published : Feb 12, 2021, 9:07 AM IST

வேலூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், வேலூர் மாநகர காட்பாடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவந்த காங்கேயநல்லூரிலிருந்து சத்துவாச்சாரி வரை பாலாறு மேம்பாலம் அரசின் இரண்டு அறிவிப்புக்குப் பின்னும் பணிகள் தொடங்காமல் இருந்தன.

இந்நிலையில் மேம்பாலப் பணிகளை விரைவுப்படுத்தும்விதமாக நிலம் எடுப்புக்காக அரசு ரூ.28.32 கோடியை ஒதுக்கீடுசெய்துள்ளது.

அதன்படி நிலம் எடுப்பு தொடர்பாக மேம்பால சாலை தொடங்கும் பிரம்மபுரம் மேம்பாலம் தொடங்கும் காங்கேயநல்லூர், மேம்பால சாலை முடியும் ராங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை வரை சுமார் 3.2 கிலோ மீட்டர் தூரம் வரையில் நிலம் எடுப்பு பணியினையும், மேம்பாலம் அமைக்க இருக்கும் வழித்தடத்தையும் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், நெடுஞ்சாலைத் துறை உதவிகோட்ட பொறியாளர் சுகந்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டனர்.

இதற்கு அடுத்தகட்டமாக கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்களை அழைத்து கருத்துகேட்பு நடத்தி பின்னர் உரிய தொகை வழங்கப்பட்டு பால பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாம்பன் ரயில் பாலத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு !

ABOUT THE AUTHOR

...view details