புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ''மக்களை பாதுகாக்க தேவையான அளவு ஆக்சிஜன் வென்ட்டிலட்டர் படுக்கைகள், அவசரகால மருந்துகள் கையிருப்பில் உள்ளது.
புதிதாக வென்ட்டிலட்டர், ஆக்சிஜன் மீட்டர் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் வேண்டிய அளவுக்கு படுக்கை வசதிகள் அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரெம்டெசிவிர் மருந்து 10,000 குப்பிகள் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளோம். எவ்வளவு விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்கிறோமோ அவ்வளவு விரைவாக நோய் எதிர்ப்பு சக்தி உடலில் ஆரம்பிக்கும். ஊரடங்கின்போது அத்தியாவசியப் பொருட்களின் கடை திறந்திருந்தால் பொதுமக்கள் நடமாடித்தான் ஆக வேண்டும் என்று இல்லை. அவசரத்திற்கு மட்டுமே பொருட்களை வாங்குவதற்காக கடைகள் திறக்கப்படுகின்றன.