தமிழ்நாடு

tamil nadu

என்றும் விவசாயிகளுக்கு காவலனாக இருப்பேன் - முதலமைச்சர் பழனிசாமி

By

Published : Feb 9, 2021, 10:45 PM IST

வேலூர்: என்றைக்கும் விவசாயிகளுக்கு காவலனாக இருந்து அனைத்தையும் செய்வேன், நீங்கள் கவலைப்பட வேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

cm palanisamy
cm palanisamy

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்து மகளிர் குழு கூட்டத்தில் முதலமைச்சர் பேசுகையில், "நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது நடக்கும்; கெட்டது நினைப்பவர்களுக்கு கெட்டது தான் நடக்கும். நான் நல்லதே நினைப்பவன் நல்லவன். அவர் கெட்டதே நினைப்பவர் அதனால் கெட்டது நடக்கிறது.

ஸ்டாலினே ஒரு கூட்டத்தில் கூறியுள்ளார், தனது சிறுவதிலேயே அண்ணாவுக்கு வாங்கிச்சென்ற பக்கோடாவை சிறிது திருடினேன் என்று; ஆக 'தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை' என்பது போல சிறுவயது முதலே அவர் அப்படித்தான். கஷ்டப்பட்டு கட்சியில் உழைத்து மேல வருவதை பற்றி ஸ்டாலினுக்கு தெரியாது. மக்களின் 1 விழுக்காடு நன்மைக்காகவாவது நான் உழைத்துக்கொண்டே இருப்பேன்.

அணைகட்டு தொகுதியில் முத்துக்குமரன் பகுதியில் இருந்து பீஞ்சமந்தை மலைக் கிராமத்திற்கு மலை பகுதியில் சாலை அமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம். ஆனால் அந்தத் தொகுதியில் திமுக எம்எல்ஏ தாங்கள் தான் சாலையை கொண்டு வந்ததாகக் கூறுகிறார். ஆட்சியில் இருப்பவர்கள் நாங்கள், 'யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது?'

என்றும் விவசாயிகளுக்கு காவலனாக இருப்பேன்

இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்தது. என்றைக்கும் விவசாயிகளுக்கு காவலனாக இருந்து அனைத்தையும் செய்வேன் நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்றார்.

இதையும் படிங்க:அமைச்சர் சிவி சண்முகம் பேசியதாக பொய் பரப்புரை: 2 பேரிடம் விசாரணை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details