தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ் இனத் துரோகி திமுக; கே.டி.ராகவன்!

வேலூர்: தமிழ் இனத் துரோகி கட்சி என்றால் அது திமுக தான். திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தமிழ் இன மக்களுக்கு துரோகம் இளைத்துள்ளது எனப் பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.

By

Published : Feb 6, 2021, 10:33 PM IST

பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன்  கே.டி.ராகவன் செய்தியாளர் சந்திப்பு  பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் திமுக குறித்து பேச்சு  BJP state general secretary KD Raghavan  BJP state general secretary KD Raghavan talks about DMK  KD Raghavan press Meet
BJP state general secretary KD Raghavan talks about DMK

தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் இன்று (பிப்.6) வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அண்மையில் மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் தமிழ்நாட்டை முன்னிலை படுத்திய பட்ஜெட் எனச் சொல்லும் அளவுக்கு இருந்தது.

இதற்காக பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் தமிழ்நாடு மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அனைத்து தரப்பு மக்களும் ஏற்கும் பட்ஜெட்டாக, நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பட்ஜெட் போடப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் குறித்து மக்களிடம் விளக்கும் வகையில் வரும் காலங்களில் 100 பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளோம்” என்றார்.

இதையடுத்து, வெறும் ஏட்டில் அறிவிக்கப்பட்டதாக மட்டுமே மத்திய பட்ஜெட் இருக்கும் என எதிர்க்கட்சிகள் கூறுவது குறித்து கேட்டதற்கு, இந்தியாவிலேயே ஸ்மார்ட் சிட்டி தமிழ்நாட்டில் தான் அதிகம். இதுபோல பல திட்டங்களை பாஜக செய்து வருகிறது. இதை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பொருளாதாரம் தெரிந்தவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். தற்போது திமுக தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மு.க.ஸ்டாலின் எவ்வுளவு தவறான குற்றச்சாட்டுகளை வைத்தாலும், பிரதமர் மக்களுக்கு நல்லது செய்துகொண்டே தான் இருப்பார். தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகள் கடனை ரத்து செய்தது வரவேற்கத்தக்கது.

7 பேர் விடுதலையில் மத்திய அரசு நாடகம் ஆடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது குறித்து கேட்டதற்கு, 7 பேர் விடுதலை விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆளுநர் தனது கருத்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்தக்கூடாது. எதர்கெடுத்தாலும் பாஜக மீது எதிர்க்கட்சிகள் பழிபோடுகின்றன.

அதேபோல் தமிழ் இன மக்களுக்கு துரோகி கட்சி என்றால் அது திமுக தான். திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தமிழ் இனத்திற்கு துரோகம் இளைத்துள்ளது. ஏட்டளவு திட்டங்களை அதிகம் போட்டது திமுக தான். இலங்க தமிழர் விவகாரத்தில், அன்றைக்கு பதவியை கூட ராஜினாமா செய்ய தயாராக இல்லாத திருமாவளவன் போன்றவர்கள் தற்போது எங்களை கேள்வி கேட்பது வேடிக்கையானது.

7 பேர் விடுதலையை பேசும் திமுக, ராஜிவ்காந்தி கொலையின் போது உயிரிழந்த காவலர் உள்பட 18 பேர் குறித்து இதுவரை பேசியது உண்டா? அவர்களது உயிர் உயிரில்லையா. பிரதமர் அரசு விழாவுக்காகவே தமிழ்நாடு வருகிறார். அவரது அரசியல் வருகை குறித்து கட்சி மேலிடம் அறிவிக்கும். வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி தேசிய தலைவர் ஜெ.பி நட்டா வேலூர் வருகை தர உள்ளார். தொடர்ந்து 2 பொது கூட்டத்தில் கலந்துகொள்கிறார். புதிய கட்சிகள் எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளன" எனக் கூறினார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது - கே.டி.ராகவன்

ABOUT THE AUTHOR

...view details