வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த தமிழ்நாடு - ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அரங்கல்துருகம், அபிகிரிப்பட்டரை, பொன்னப்பள்ளி, கதவாளம் மலைக்கிராம மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. ஆனால் தற்பொழுது மழை இல்லாத காரணத்தால், இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள், கொட்டகைகள் அமைத்து ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த மலைப்பகுதியை ஓட்டியுள்ள வீடுகள் மற்றும் கொட்டகைகளில் கட்டிவைக்கப்படிருந்த கால்நடைகள் தொடர்ந்து சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
ஆம்பூர் மலை கிராமங்களில் அச்சுறுத்தும் சிறுத்தையை பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை
வேலூர்: ஆம்பூர் மலை கிராமங்களில் தொடர்ந்து கால்நடைகளை தாக்கி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதவிர கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி வாணியம்பாடி அருகே சிறுத்தை தாக்கி 5 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் இரண்டு முறை கூண்டு அமைத்தும் அந்த சிறுத்தை இன்னும் பிடிப்படவில்லை.
இவ்வாறு, மாதம் ஒருமுறை சிறுத்தைக்கு அக்கிராமத்தில் உள்ள கால்நடைகள் பலியாகி வருவதால், அக்கிராம மக்கள் கால்நடைகளை காட்டிற்கு மேய்சலுக்கு அனுப்ப மிகவும் பயந்து வருகின்றனர். தங்களின் பிள்ளைகளையும் வெளிய அனுப்ப முடியாமல் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். முதல் முறை சிறுத்தை ஊருக்குள் வந்த போது வனத்துறையினர் முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் கால்நடைகள் காப்பற்றப்பட்டிருக்கும், ஆனால் வனத்துறையினர் மெத்தன போக்காக செயல்பட்டு வருகின்றனர். எனவே, வனத்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.