தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சின்னம் கேட்டு அடம்பிடிக்கும் வேட்பாளர்...!

வேலூர்: தேர்தல் அலுவர்கள் ஒதுக்கிய சின்னம் வேண்டாம் வேறு சின்னம் வேண்டுமென்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேட்பாளரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

By

Published : Mar 29, 2019, 9:03 PM IST

வேலூர் வேட்பாளர்

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. அதே நாளில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிந்து. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மேலும் இன்று இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்களுக்குச் சின்னம் ஒதுக்க ஆம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஷோபா பாரத் தனக்கு அலமாரி, ஆப்பிள் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா வேண்டும் என விருப்பமனு தாக்கல் செய்திருந்தார். எனவே சுயேட்சை வேட்பாளர் ஷோபா பாரதிற்கு அலமாரி சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர் தனக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் வேண்டும் எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

இதனையடுத்து தேர்தல் அலுவலர் ஷோபா பாரத் வேட்புமனுவில் முதல் சின்னமாக அலமாரியை தேர்வு செய்ததால் தான் அலமாரி சின்னம் ஒதுக்கியதாக விளக்கமளித்தார்.

இதனை ஏற்காத வேட்பாளர் மீண்டும் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

தேர்தல் அலுவர் ஷோபா பாரத் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்தால் வேட்புமனு நிராகரிக்கப்படும் என எச்சரித்த பின்பு அவருக்கு ஒதுக்கப்பட்ட அலமாரி சின்னத்தையே ஒப்புக்கொண்டு சென்றார்.

சின்னம் கேட்டு அடம்பிடித்த வேட்பாளரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details