தமிழ்நாடு

tamil nadu

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வேலூரில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்!

By

Published : Feb 25, 2021, 2:58 PM IST

வேலூர் : மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் (பிப். 23) முதல் இன்று (பிப்.25) வரை காலவரையற்ற குடியேறும் போராட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி  வேலூரில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்!
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வேலூரில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்!

காலவரையற்ற குடியேறும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக கொரோனா நிவாரண நிதியாக ரூ. 3 ஆயிரம் தரக் கோரியும், தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களைப் போல் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ. 3 ஆயிரம் அல்லது 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், 2016 சட்டத்தை அமல்படுத்தி மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரியும் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து போராட்டம் நடத்தியும் அரசு எவ்வித நடவடடிக்கையும் எடுக்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை வேலூர் தெற்கு காவல்துறையினர் கைது செய்து விடுவித்த பின்னரும், மீண்டும் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். பின்னர் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கோஷங்களை எழுப்பிய படி போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க :'இயங்கும்'... 'இயக்கிப்பார்' - இன்று அது நடக்குமா?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details