திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள பெரிய கடை வீதியில் பிரபலமான வணிக நிறுவனங்கள் இயங்கி வருவதால் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும். இங்கு ஹஜ்ரத் ஹீசேன்ஷா பண்டாரிஷா தர்கா அமைந்துள்ளது. இந்நிலையில் தர்காவின் பூட்டை உடைத்து அதனுள்ளே இருந்த உண்டியலை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து திருட்டு சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், தர்காவின் எதிரே உள்ள மளிகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.