அனுமதியின்றி செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள ஆழ்குழாய்களுக்கு சீல் வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் 23 குடிநீர் சுத்திகரிப்பு ஆலாய்களில் உள்ள ஆழ்குழாய்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது. பொதுப்பணித் துறையின் நிலத்தடி நீரியல் பிரிவு அலுவலர்கள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில் அமைந்துள்ள பெஸ்ட் அக்வா என்கிற ஆலையில் உள்ள ஆழ்குழாயை பொதுப்பணித் துறை நிலத்தடி நீரியல் பிரிவு உதவி இயக்குனர் பாலகுமரன் தலைமையிலான அலுவலர்கள் சீல் வைத்தனர்.