தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீங்க ஓ போடுங்க... நாங்க கேஸ் போடுறோம் !

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அனுமதியின்றி திருச்சியில் இறுதிக் கட்டபரப்புரையில் ஈடுபட்ட பாஜக மாநில துணைப் பொருளாளர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 200 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

நீங்க ஓ போடுங்க...  நாங்க கேஸ் போடுறோம் !
நீங்க ஓ போடுங்க... நாங்க கேஸ் போடுறோம் !

By

Published : Feb 19, 2022, 9:09 AM IST

திருச்சி:தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு இருந்தனர்.

திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் 200க்கும் மேற்பட்டோருடன் பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக அரசைக் கேலி செய்யும் வகையில், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பும் வகையில் புஷ்பா படத்தில் உள்ள "ஓ சொல்றியா, மாமா ஒ ஓ சொல்றியா என்ற பாடலை பொய் சொல்றியா மாமா பொய்யா சொல்றியா மாமா" என்று மாற்றியமைத்த பாடலை ஒளிபரப்பி சாலையில் நடனம் ஆடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே, நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில்தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாகவும், வைரஸ் தொற்று காலத்தில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதாகவும் திருச்சி மாநகர காந்தி மார்க்கெட் காவல்துறையினர் திருச்சி பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதையும் படிங்க:'ஊ சொல்றியா மாமா, பொய்யா சொல்றியா மாமா' - பாஜகவினர் நூதன பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details