தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திருச்சி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெறும்' - ஆட்சியர்

திருச்சி: காந்தி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

By

Published : Mar 25, 2020, 9:46 PM IST

sivarasu
sivarasu

இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், திருச்சி காந்தி சந்தையில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதாக புகார் எழுந்தது. அதனால் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், நாளை முதல் (மார்ச் 26) காந்தி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெறும். அந்த வியாபாரம் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை மட்டுமே நடைபெறும். சில்லரை வியாபாரிகளான மளிகைக் கடைக்காரர்கள் மட்டுமே காய்கறிகளை வாங்க வர வேண்டும். அப்படி வரும் வியாபாரிகள் மாஸ்க் அணிந்து வரவேண்டும்.

மாவட்ட ஆட்சியர் சிவராசு

அதேபோல் சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் மாஸ்க் அணிய வேண்டும். வாரத்தில் சனி, ஞாயிறு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளிலிருந்து திருச்சி வந்த 483 பேரின் கைகளில் முத்திரை குத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:ரயில்வே பணிமனை, ஹெச்ஏபிபி தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details