பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், புதுவை, கரூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான பேட்மிண்டன் போட்டி நாக்-அவுட் முறையில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது. 21 அணிகள் பங்கு பெற்ற பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் மோதின.
பேட்மிண்டன் போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டம்
திருச்சி: கல்லூரிகளுக்கிடையேயான பேட்மிண்டன் போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி 7ஆவது முறையாக வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது.
இதில் 2-0 என்ற செட் கணக்கில் வென்ற திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி தொடர்ந்து 7ஆவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வென்றது. மூன்றாம் இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டை ஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரி, நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கலை அறிவியல் கல்லூரியை 2-0 என்ற செட் கணக்கில் வென்றது.
வெற்றி பெற்ற ஜமால் முகமது கல்லூரியின் மாணவர்களுக்கு, அக்கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால் முகமது, இணைச்செயலாளர் அப்துஸ் சமது, முதல்வர் இஸ்மாயில் முகைதீன், உடற்கல்வி இயக்குனர் ஆகியோர் பாராட்டு தெரிவித்தார்.