தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் குழுக் கூட்டம் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ராமகவுண்டர் முன்னிலை வகித்தார்.
கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறுகையில்,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விவசாய சங்கங்களின் சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, யாருடன் சேர்ந்து போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலை வழங்கப்படும் வரை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக செயல்படும் கட்சிகளை எதிர்த்து தேர்தல் பணியாற்றப்படும்’ என்றார்.