தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மத்திய அமைச்சர் போல் பேசுங்கள் சதானந்தா கவுடா..!' - சாடும் தமிழ்நாடு விவசாயிகள்!

திருச்சி: "கர்நாடகாவில் மழை பெய்தால் தண்ணீர் கொடுப்பார்கள் என அமைச்சர் காமராஜ் கூறியது கண்டிக்கத்தக்கது. இந்தியாவுக்கே அமைச்சராக இருக்கும் சதானந்தா கவுடா, தண்ணீர் திறப்பு தொடர்பாக ஒரு மாநிலத்தின் அமைச்சர் போல ஒரு பேசக்கூடாது" என்று, விவசாயிகள் சங்க கூட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.

காவிரி விவகாரத்தில் அமைச்சர் பேசியுள்ளது கண்டிக்கதக்கது - விவசாய சங்கம்

By

Published : Jun 8, 2019, 6:54 PM IST

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டு இயக்க குழு கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. விவசாய சங்க தலைவர் தனபாலன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தனபாலன், "ஜூன் மாதம் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க வேண்டும். அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் 9.19 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டதை கர்நாடக அரசு மதித்து நடக்க வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறி கர்நாடகாவுக்கு துணை போகும் வகையில் ஒரு சில சங்கங்கள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இது தமிழகத்திற்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும். விவசாயிகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் துரோகிகள் என எச்சரிக்கை விடுக்கிறோம்.

காவிரி விவகாரத்தில் அமைச்சர் பேசியுள்ளது கண்டிக்கதக்கது - விவசாய சங்கம்

தமிழ்நாடு அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்து தண்ணீரை கேட்போம் என்று கூறாமல், மழை பெய்தால் கொடுப்பார்கள் என்று கூறுவதற்கு காமராஜ் அமைச்சராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசுடன் கூட்டாக இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் மோடிக்கு அழுத்தம் கொடுத்து தண்ணீரை பெற்றுத் தருவோம் என்று கூறுவதை விட்டுவிட்டு, தண்ணீர் திறக்க மாட்டார்கள் என்று கூறுவது மிகக் கேவலம். இதே கருத்தை சதானந்தகவுடா கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் இந்தியாவுக்கே அமைச்சர். ஒரு மாநிலத்து அமைச்சர் போல ஒரு பேசக்கூடாது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details