திருச்சி அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் 6 மாடி கட்டடம் கரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இங்கே திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தற்போது இங்கு சுமார் 250க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் இருப்பதுபோல் ஒவ்வொரு நோயாளியின் படுக்கைக்கு அருகேயும் ஆக்சிஜன் செலுத்தும் வகையில் குழாய் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் கருவிகள் வழங்கல்
திருச்சி: அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் ஃப்லோ (flow) மீட்டர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆக்சிசன் கருவிகள்
தற்போது கரோனா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற அதிக அளவு ஆக்சிஜன் செலுத்தும் கருவியான ஆக்ஸிஜன் ஃப்லோ மீட்டர் கருவிகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
ஒரு கருவியின் மதிப்பு 3 லட்சம் ரூபாயாகும். மொத்தம் 10 கருவிகள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 3 வார்டுகளில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவிகளை மருத்துவமனை டீன் வனிதா வழங்கினார். கண்காணிப்பாளர் ஏசு நாதன், மயக்கவியல் பேராசிரியர் இளங்கோ ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.