திருச்சி ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகர் 150 பேர் பணிபுரிகின்றனர். அவர்களின் பணி நேரம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
பணிச்சுமையை கட்டுப்படுத்த வலியுறுத்தி ரயில்வே உயர் அலுவலர்களுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனைக் கண்டித்து, உயர் அலுவலர்களுக்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று காலை திருச்சி ரயில்வே ஜங்ஷன்
தபால் நிலையத்தில் டி.ஆர்.இ.யு சங்கத்தைச் சேர்ந்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிக்கெட் பரிசோதகர்கள் நூதன போராட்டம் இதையும் படிங்க:எல்.ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்