தமிழ்நாட்டில் இன்று (நவ.06) ஒரே நாளில் 2 ஆயிரத்து 370 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருச்சி மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 740ஆக அதிகரித்துள்ளது.
குறைந்துவரும் கரோனா : சிறப்பு சிகிச்சை மையம் மூடல்
திருச்சி : கரோனா தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் சிறப்பு சிகிச்சை மையம் மூடப்பட்டது.
திருச்சியில் இன்று ஒரே நாளில் 41 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 233ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று காரணமாக இன்று யாரும் உயிரிழக்கவில்லை. திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 169ஆக உள்ளது.
தற்போது மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வந்த சிறப்பு சிகிச்சை மையம் மூடப்பட்டுள்ளது. திருச்சி கி.ஆ.பெ.அரசு விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.