தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 25, 2022, 5:23 PM IST

ETV Bharat / state

திருச்சியில் வரும் 28ஆம் தேதி இயற்கை நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கம்

திருச்சியில் வரும் 28ஆம் தேதி இயற்கை வேளாண்மை மற்றும் விவசாயம் குறித்தும், பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள் குறித்தும் கருத்தரங்கம் நடத்தப்படுவதாக ஈஷா அறிவித்துள்ளது.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த ஈஷா விவசாய இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார்
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த ஈஷா விவசாய இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார்

சென்னை:இயற்கை வேளாண்மை மற்றும் விவசாயம் குறித்தும், பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள் குறித்தும் திருச்சியில் வரும் 28ஆம் தேதி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்தப்படும் என ஈஷா அறிவித்துள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈஷா விவசாய இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், “ஈஷா நிறுவனத்தின் சார்பில் விவசாய இயக்கம் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடன் இணைந்து பல்வேறு கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. ஈஷா விவசாயம் அமைப்பின் சார்பில் 15ஆயிரம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 3ஆயிரம் விவசாயிகள் இயற்கை வேளாண்மை தற்பொழுது செய்து வருகின்றனர்.

திருச்சியில் வரும் 28ஆம் தேதி நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் வேளாண்மை வல்லுநர் பாமயன், இயற்கை விவசாயத்தில் அவசியம் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்து கருத்துகளைத் தெரிவிக்கவுள்ளார்.

அதேபோல் விவசாய நிலங்களில் ஏற்படும் பூச்சிகள் குறித்து விவசாயிகள் வேதனையடைகின்றனர். அதனைப் போக்கும் வகையில் பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் ஆலோசனை வழங்கவுள்ளார். பாரம்பரிய அரிசியின் மருத்துவ குணம் மற்றும் சந்தை வாய்ப்பு குறித்து சித்தர் ஆலோசனை வழங்குகிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஈஷா விவசாய இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார்

அதேபோல் கால் கிலோ விளைநிலையில் லாபகரமாக மகசூல் எடுக்கும் நுட்பங்கள் குறித்து ஆலங்குடி பெருமாள் ஆலோசனைகளை வழங்குகிறார். இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்வதற்குப் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் மற்றும் நெல்லுக்கு உகந்த இடுபொருட்கள் பயன்பாடு, பயிர் மேலாண்மை உள்ளிட்டப் பல்வேறு ஆலோசனைகளை இந்த கருத்தரங்கில் வழங்கவுள்ளனர். இயற்கை விவசாயத்தைப் பிற மாநிலங்களைப்போல் தமிழ்நாடும் ஊக்குவிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுவித்தார்.

இதையும் படிங்க:வரும் 30ஆம் தேதியுடன் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி நிறுத்தம்...

ABOUT THE AUTHOR

...view details