திருச்சி விமான நிலையத்திலிருந்து தினமும் துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் புறப்படுவது வழக்கம்.
மருந்து பாட்டில்களில் கடத்தப்பட்ட போதைப் பொருள்கள்
திருச்சி: மருந்து பாட்டில்களில் கடத்தப்பட்ட 10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலையம்
அதேபோல் நேற்றிரவு மலேசிய தலைநகரம் கோலாலம்பூருக்கு செல்லும் விமானத்திற்கு தயாராக இருந்த பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் நடத்திய சோதனையில் சிவகங்கையைச் சேர்ந்த பயணி ஒருவர் மருந்து பாட்டிலுக்குள் 10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களைக் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போதைப் பொருட்கள் கடத்தி வந்தவரிடம் விமான நிலைய அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.