தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அச்சகங்கள் செயல்படக் கோரிக்கை: மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திருச்சி: ஏப்ரல் 20ஆம் தேதிமுதல் அச்சகங்கள் அனைத்தும் செயல்பட அனுமதிக்கக் கோரி பிரிண்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பிரசாத், மாவட்ட ஆடசியரிடம் மனு அளித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த பிரின்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பிரசாத்
செய்தியாளர்களை சந்தித்த பிரின்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பிரசாத்

By

Published : Apr 17, 2020, 4:36 PM IST

திருச்சி பெரிய கடைவீதியில் உள்ள அல்லிமால் தெருவில் சுமார் 300 அச்சகங்கள் செயல்பட்டுவருகின்றன. ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது இந்த அச்சகங்கள் பூட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் அச்சகங்கள் திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டுமென்று திருச்சி பிரிண்டர்ஸ் சங்கத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர.

இது குறித்து திருச்சி மாவட்ட பிரிண்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பிரசாத், செயலாளர் மோகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் தமிழ்நாடு அரசுக்கும், மருத்துவர்களுக்கும், செவிலியருக்கும், சுகாதார அலுவலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கடந்த மார்ச் 24ஆம் தேதிமுதல் மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்த 21 நாள் ஊரடங்கில் நாங்களும் பங்கேற்று, தற்போதுவரை அச்சகங்களைத் திறக்காமல் உள்ளோம். ஊழியர்கள் பணிக்கு வராமல் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது மீண்டும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த பிரிண்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பிரசாத்

அரசு அனுமதி வழங்கினால் அச்சகங்களில் அரசு அறிவித்தபடி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பணியாற்றுவோம் என்பதை உறுதியளித்துக் கொள்கிறோம்” என்றனர்.

இதைத்தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து அளித்தனர். மேலும் அந்தக் கோரிக்கை மனுவை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சங்கத்தினர் அனுப்பிவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: வாகன ஓட்டுநர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க கோரிக்கை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details