திருச்சி மணப்பாறையில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 42 மணிநேரங்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை இனிப்புடன் கொண்டாடிவரும் சூழலில் நடுக்காட்டுப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அப்பகுதி மக்கள் சுஜித்துக்காக தீபாவளியை தியாகம் செய்துள்ளனர்.