ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாத நிலை இருந்துவருகிறது. குழந்தை சுஜித்துக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் களத்தில் தொடர்ந்து இருக்கின்றனர்.