தமிழ்நாடு

tamil nadu

‘இறுதி முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்’ - அமைச்சர் விஜயபாஸ்கர்

திருச்சி: அழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்பதில் இறுதி முடிவை எடுக்கவேண்டிய தருணத்தில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

By

Published : Oct 28, 2019, 12:47 PM IST

Published : Oct 28, 2019, 12:47 PM IST

அமைச்சர் விஜயபாஸ்கர்

அழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியானது நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதனை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், சுஜித் மீட்பு நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ‘குழந்தையை மீட்கும் பணியில் எதிர்பாராத அளவிற்கு உள்ள பாறைகளால் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதிக திறன் கொண்ட ரிக் இயந்திரங்கள் திணறும் வகையில் பாறைகள் அமைந்துள்ளது. திட்டமிட்டபடி தற்போது குழிகள் 90 அடி தோண்டியிருக்க வேண்டும். ஆனால், பாறைகள் இருப்பதால் 40 அடி மட்டுமே தோண்டப்பட்டுள்ளது’ என்றார்.

மேலும் பேசிய அவர், ‘இதில் மாற்றுத் திட்டம் குறித்து வல்லுநர்களுடன் ஆலோசனை நடைபெற்றுவருகிறது. அதிகப்படியான முயற்சிகளை எடுத்தும், அதற்கான பலன் குறைவாகவே உள்ளதால் இறுதி முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்’ என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #SaveSujith மீண்டு வா சுஜித்! - முதன்மை தகவல்கள் உடனுக்குடன்

ABOUT THE AUTHOR

...view details