தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் உதவி!

திருச்சி: அரசு மருத்துவமனைக்கு ரூ.28 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் ரோட்டரி கிளப் சார்பில் வழங்கப்பட்டது.

equipment for corona in trichy
equipment for corona in trichy

By

Published : Jun 10, 2020, 7:10 PM IST

Updated : Jun 10, 2020, 7:45 PM IST

திருச்சி டைமண்ட் சிட்டி ரோட்டரி சங்கம், கோட்டை ரோட்டரி சங்கம், சோழா ரோட்டரி சங்கம், இலங்கை யாழ்ப்பாணம் ரோட்டரி சங்கம் சார்பில் கரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள மாவட்ட ரோட்டரி சங்க அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு ரூ.18 லட்சம் மதிப்புள்ள இரண்டு அல்ட்ரா சவுண்ட் கலர் டாப்லர், ஏழு டிஜிட்டல் இதய பரிசோதனை வரை படக்கருவி என ஒன்பது உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதேபோல் திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி, தொட்டியம், துவரங்குறிச்சி, துறையூர், மண்ணச்சநல்லூர், மணப்பாறை தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டது.

மொத்தம் ரூ.28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார். திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா உபகரணங்களை பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் லட்சுமி, ரோட்டரி மாவட்ட ஆளுநர் டாக்டர் ஜமீர் பாஷா, மற்றும் மருத்துவர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கோட்டை ரோட்டரி சங்கத்தில் கௌரவ உறுப்பினராக இணைந்தார். அவருக்கு தலைவர் அமீர் பாஷா ரோட்டரி கிளப் முத்திரையை அணிவித்தார்.

இதையும் படிங்க:கரோனாவைக் கட்டுப்படுத்த கூடுதலாக 2834 சுகாதாரப் பணியாளர்கள்

Last Updated : Jun 10, 2020, 7:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details