தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஊரடங்கு நிவாரணம் வேண்டும்...' - எல்ஐசி முகவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

திருச்சி: ஊரடங்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, எல்ஐசி முகவர் சங்கத்தினர் திருச்சி எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : May 30, 2020, 2:51 AM IST

எல்ஐசி
எல்ஐசி

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 50 நாள்களுக்கும் மேலாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ள காரணத்தினால், பல தொழில்கள் நலிவடைந்து, மக்கள் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

அரசுத் தரப்பில் பல்வேறு தரப்பின மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி தரும் எல்ஐசி முகவர்களுக்கு தமிழ்நாடு அரசு எந்த விதமான நிவாரணமும் வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், எல்ஐசி முகவர் சங்கத்தின் தலைவர் பூமிநாதன் தலைமையில் திருச்சி எல்ஐசி அலுவலகம் முன்பு முகவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், 'தமிழ்நாடு அரசு உடனடியாக முகவர்கள் அனைவருக்கும் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், பணிப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்’ போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதையும் படிங்க:கரோனாவை விரட்டும் ஆற்றல் மக்களிடம்தான் உள்ளது: அமைச்சர் செல்லூர் ராஜு!

ABOUT THE AUTHOR

...view details