தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 7, 2021, 8:53 AM IST

ETV Bharat / state

எதிர்க்கட்சிகள் பலம் பெற்று விடக்கூடாது என வேளாண் கடன் தள்ளுபடி: கே.எஸ்.அழகிரி

திருச்சி: எதிர்க்கட்சிகள் பலம் பெற்று விடக்கூடாது என வேளாண் கடனை அதிமுக அரசு தள்ளுபடி செய்துள்ளதாக கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் பலம் பெற்று விடக்கூடாது என வேளாண் கடன் தள்ளுபடி
எதிர்க்கட்சிகள் பலம் பெற்று விடக்கூடாது என வேளாண் கடன் தள்ளுபடி

திருச்சி மாவட்டம் முசிறியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் சங்கமம் ஏர் கலப்பை பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலைராஜன் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், " தமிழ்நாட்டில் ஒரு கொடுமையான ஆட்சி நடைபெறுகிறது. 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை தவறு என்று கூறி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்டது. இதற்கு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தடை பெற்றுள்ளார்.

இந்த தடை உத்தரவை மேல்முறையீடு செய்ய மோடி வசமுள்ள சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஓராண்டாக எதிர்க்கட்சியினர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி வந்தோம். ஆனால் அப்போதெல்லாம் அதை செய்யவில்லை.

தேர்தலுக்காவும், அரசியலுக்காகவும் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக அவர் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் பலம் பெற்று விடக்கூடாது என்பதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: வேளாண் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்திற்குத் தயாரான அரசு?

ABOUT THE AUTHOR

...view details