திருச்சி: நாட்டின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டு முதலமைச்சரின் குடியரசு தின காவலர் பதக்கங்களை 98 பேருக்கு அணிவித்தார்.
குடியரசு தின விழாவில் மணக்கோலத்தில் வந்து விருது பெற்ற திருச்சி தம்பதி!
திருச்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மணக்கோலத்தில் வந்த அரசு ஊழியர் தனது மனைவியுடன் இணைந்து பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்டார்.
பின்னர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 301 பேருக்குச் சான்றிதழை வழங்கி கௌரவித்தார். அப்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒலி பிரிவில் பணிபுரிந்து வரும் செல்வமணி என்பவருக்கு, சிறப்பாக பணிபுரிந்தமைக்கான நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதனை செல்வமணி, திருமணக் கோலத்தில் தனது மனைவியுடன் வந்து பெற்றார். மேலும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதையும் படிங்க:பத்ம பூஷன் விருது பெறும் வாணி ஜெயராம்.. வளர்ந்து வந்த கதை!