திருச்சி:முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட மூன்று வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து அவர் தனியார் ஹோட்டலில் தங்கியிருக்கிறார். திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்து இடவேண்டும், மற்ற நாள்களில் அவர் ஓய்வில் இருக்கிறார்.
இவரைக்காண, தினமும் வெளியூர்களில் இருந்து ஏராளமான அதிமுக முக்கியப் பிரமுகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவற்றை வீடியோவாக தொகுத்து எம்.ஜி.ஆரின் பாடலைக்கோர்வை செய்து தினமும் அவருடைய ஐடி விங் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பாடல்கள் அனைத்தையும் ஜெயக்குமாரே செலக்ட் செய்து கொடுப்பதோடு, இந்தப்படத்தில் வரும் என சரியாக நினைவில் வைத்திருந்து சொல்கிறாராம்.