திருச்சி: துறையூர் வட்டம் உப்பிலியபுரம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர் அதை பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அவர் அளித்த அந்த புகார் மனுவில், "உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளராக இருப்பவர் முத்து செல்வம். இவரது மனைவி ஹேமலதா, உப்பிலியபுரம் சேர்மனாக இருக்கிறார். இவர்கள் கடந்த 19 ஆம் தேதி காலை, உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலகத்தில் பழைய டாடா சுமோ வாகனம் ஒன்றை ஏலம் விட இருந்தனர்.
இந்நிலையில் அந்த வாகனத்தை ஏலம் எடுக்க நடராஜன் உட்பட சிலர் ரூ.10,000 மட்டும் முன்பணம் கட்டியிருந்தார்கள். ஆனால் ஏல அதிகாரி தாமதித்து வந்தார். ஏன் என கேட்ட போது, முத்துச்செல்வம் என்ற நபர் ஏலம் விடக்கூடாது எனக் கூறியதாக கூறினார்கள்.
அதனைத் தொடர்ந்து, ஏலம் எடுக்க நடராஜன் சென்றபோது தன்னை மீறி யார் ஏலம் எடுக்க வந்தீர்கள் என கேட்டு வெளியே வந்த ஒன்றிய செயலாளர் முத்து செல்வமும் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாசு, செந்தில், சசிகுமார், ஸ்ரீதர் ஆகியோர் வந்து ஏரியில் 10 அடியில் தோன்றி வைத்துள்ளேன் அதில் உன்னை கொலை செய்து புதைத்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.