திருச்சி :கிராப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (வயது 52) இவர் கத்தார் நாட்டிலுள்ள தனியார் ஹோட்டலில், கடந்த 15 ஆண்டுகாலம் மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார். அந்த வேலையை விட்டு விட்டு திருச்சிக்கு வந்து மனைவி மற்றும் இருமகள்களுடன் வாழ்ந்துவருகிறார். ரவியைத் தொடர்ந்து, மேலும் இரண்டு ஊழியர்கள் வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கின்றனர். ஊழியர்கள் தொடர்ந்து வேலையை விட்டுச்செல்வதால் வசந்தபவன் உரிமையாளர் ராஜேந்திரன் மன வேதனையடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலுவிடம், வசந்தபவன் உரிமையாளர் ராஜேந்திரன் தனது பேசியுள்ளார். இந்நிலையில் கத்தார் நாட்டில் வசந்தபவன் ஹோட்டலில் மூன்றரை கோடி ரூபாய் முறைகேடு செய்துவிட்டதாக ரவி மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், திருச்சியில் உள்ள குரு ஹோட்டலுக்கு ரவி மற்றும் அவரது மனைவியை அழைத்து தனியறையில் அடைத்து வைத்து, அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாக ரவி தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட ரவியும் அவரது குடும்பத்தினரும் கூறுகையில், வசந்தபவன் உரிமையாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, குரு ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்டோர் என்னிடம் 15 லட்ச ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டனர், மேலும் எங்களுடைய வீட்டையும் அபகரித்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். என்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் வீடியோ, ஆடியோ ஆதாரங்களை கொடுத்தால், அதனை காவல்துறையினர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள்" என கூறியுள்ளார்.
வணிகர் பேரவையா கட்டபஞ்சாயத்து கழகமா ? இதுகுறித்து விளக்கம் கேட்க பலமுறை கோவிந்தராஜூலுவை தொடர்ப்பு கொண்டோம் அவரது அலைபேசியை உதவியாளரே எடுத்தார். கொஞ்சம் அர்ஜெண்ட் பேச வேண்டும் என்றோம் எந்த அர்ஜெண்டா இருந்தாலும் சரி அவரு எஸ்.பி.கூட பேசிக்கிட்டு இருக்காரு என கூறி அலைப்பேசியை துண்டித்தார்.வரும் 5ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள தமிழக வணிகர் விடியல் மாநாட்டில், தமிழக முதல்வர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்புரை நிகழ்த்த உள்ளார். இந்த கோவிந்தராஜுலுவிற்கு எதிராகத்தான் தற்போது புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிறுவர்களின் உயிரைக் குடித்த களிமேடு தேர் விபத்து!