தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்த இளைஞர் கைது!

திருச்சி: தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த கேரள மாநிலைத்தைச் சேர்ந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்த கேரள இளைஞர்
செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்த கேரள இளைஞர்

By

Published : Jan 3, 2020, 10:32 AM IST

திருச்சி மாவட்டத்தில் தொடர் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டுவந்த கேரளாவைச் சேர்ந்த முகமது முஸ்தபா என்பவரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் முஸ்தபாவை சுற்றிவளைத்து பிடித்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட முஸ்தபாவிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர், விசாரனையில் 2015ஆம் ஆண்டு முதல் கேரளா மாநிலத்திலும் தமிழ்நாட்டில் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ,சேலம், திருப்பூர், திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களிலும் அதிகாலையில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடமிருந்து 300க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்த கேரள இளைஞர்

திருச்சியில் மட்டும் 13 செயின் பறிப்பு சம்பவங்களில் முஸ்தபாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் இவர்மேல் செயின் பறிப்பு வழக்குகள் இருப்பது தெரிவந்துள்ளது. பின்னர், அவரிடமிருந்த 110 சவரன் தங்க நகைகளை மீட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் காவல் துறையினரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்துவந்த முகமது முஸ்தபா தற்போது சிறையில் கம்பி எண்ணிகொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: பெண்ணிடம் செயின் பறிப்பு முயற்சி: லாவகமாக செயப்பட்ட பென்!

ABOUT THE AUTHOR

...view details