திருச்சி:இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை உவா மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க கௌரவத் தலைவருமான செந்தில் தொண்டைமான் திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகே உள்ள மிளகு பாறையில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றதற்காக பாராட்டு விழா மற்றும் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஒண்டிராஜ் தலைமையில் இலங்கை ஆளுநருக்கு மாலைகள் மற்றும் சால்வைகள் அணிவித்தும், பூரண கும்ப மரியாதை கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆளுநரைச் சந்தித்து சால்வை அணிந்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''ஒவ்வொரு பாதையில் நமது பயணங்கள் இருந்தாலும் தமிழர்கள் என்ற கலாசாரத்தில் ஒன்றாகத் தான் இருப்போம். 15 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பாதுகாப்புக்காக எங்கள் அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைவரும் பயணிப்போம், உழைப்போம், உதவிகளும் செய்து கொண்டு இருப்போம்.
இதையும் படிங்க:தமிழரின் தொன்மையானது வெளிச்சம் பெற்றுக்கொண்டே இருக்கப்போகிறது - முதலமைச்சர் பெருமிதம்