தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Trichy: கோடநாடு கொலை கொள்ளை: உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்: ஓபிஎஸ் - அமமுகவினர் ஆர்ப்பாட்டம்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வலியுறுத்தி திருச்சியில் ஓபிஎஸ் மற்றும் அமமுக அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி:கொடநாடு கொலை கொள்ளை: உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்: ஓபிஎஸ் மற்றும் அமமுகவினர் ஆர்ப்பாட்டம்!
திருச்சி:கொடநாடு கொலை கொள்ளை: உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்: ஓபிஎஸ் மற்றும் அமமுகவினர் ஆர்ப்பாட்டம்!

By

Published : Aug 1, 2023, 5:59 PM IST

Trichy: கோடநாடு கொலை கொள்ளை: உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்: ஓபிஎஸ் - அமமுகவினர் ஆர்ப்பாட்டம்!

திருச்சி:கோடநாடு கொலை வழக்கில்குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று (01.08.2023) திருச்சி மாவட்டத்தில் அமமுக மற்றும் ஓ‌பிஎஸ் அணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மற்றும் அமமுக கட்சித் தொண்டர்கள் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டார். தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமமுக மற்றும் ஓ‌.பி.எஸ் அணியைச் சேர்ந்த நகர், ஒன்றியம் பேரூர், சார்பு அணி மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில், ''தேனியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் இந்த இடத்தில் தான் முதன்முதலில் என்னை நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார். இங்கு கூடிய கூட்டம் பிரியாணி, மது மற்றும் காசுக்காக வந்த கூட்டம் இல்லை. ஜெயலலிதாவிற்காக வந்த உண்மையான தொண்டர்கள்'' என்றார்.

அங்கு பேசிய ஓ.பி.எஸ், ''ஆட்சிக்கு வந்த 3 மாதத்திற்குள் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், 30 மாதங்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோடநாடு வழக்கு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. உண்மையான குற்றவாளிகளை விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடையும்'' என அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோவில் அருகில் இன்று ஓபிஎஸ் அணியின் கழக அமைப்புச் செயலாளரும் திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் புறநகர் மாவட்டச் செயலாளர்கள் ரத்தினவேல், எம்.ஆர். ராஜ்மோகன், சாமிக்கண்ணு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைமை நிலையச் செயலாளர் ராஜசேகரன், அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான், மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் ''கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு எடப்பாடி பழனிசாமிக்கு துணை போகாமல் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: அமைச்சர் சேகர்பாபு அழுத்தத்தால் திருநாகேஸ்வரம் கோயில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தி வைப்பு - தாமரைச்செல்வன்

ABOUT THE AUTHOR

...view details