தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி -கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் மாயம் !

திருச்சியில், கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தொழில் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாயமான சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி -கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் மாயம்
திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் மாயம்

By

Published : May 18, 2022, 11:52 AM IST

திருச்சி,சிறார் கூர்நோக்கு இல்லம்என்பது இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் செய்யும் பல்வேறு குற்றச் செயல்களுக்காக. மாவட்ட சிறார்கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு, எதிர்காலத்தில் தீயவழிகளில் மனதை செலுத்தாமல், நல்வழியில் மனதை செலுத்த பயிற்சி தரப்படும் இடம் ஆகும்.

பாலக்கரை போலீசார், கூனிபஜார் அருகே, கோரி மேட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை குற்ற வழக்கில் கைது செய்தனர்.தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி, இ.பி., ரோட்டில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். அதன்பின், திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள சிறார் வரவேற்பு மையத்துக்கு, தொழில் பயிற்சி பெறுவதற்காக, சிறுவனை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், நேற்று, பயிற்சி மையத்தில் இருந்து, அந்த சிறுவன் மாயமாகி விட்டதாக, கண்காணிப்பாளர் ஆல்பர்ட் மனோகரன் கொடுத்த புகார்படி, கோட்டை போலீசார் வழக்கு பதிந்து, சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:31 ஆண்டுகள் சிறை!- பேரறிவாளனுக்கு விடுதலை கிடைக்குமா?- உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு...

ABOUT THE AUTHOR

...view details