தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 4, 2023, 12:21 PM IST

ETV Bharat / state

திருச்சியில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 5,270 கிலோ மாம்பழங்கள் அழிப்பு!

திருச்சியில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5,270 கிலோ மாம்பழங்கள் மற்றும் 15 வாழைத்தார் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5,270 கிலோ மாம்பழங்கள் அழிப்பு
ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5,270 கிலோ மாம்பழங்கள் அழிப்பு

திருச்சியில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5,270 கிலோ மாம்பழங்கள் மற்றும் 15 வாழைத்தார் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்துள்ளனர்

திருச்சி:தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. இதனால் பழச் சந்தைக்கு‌ மாம்பழங்களின் வரத்து உள்பட ஏற்றுமதி - இறக்குமதி ஆகியவையும் அதிகரிக்கத் தொடங்கி விற்பனை சூடு பிடித்து உள்ளது. அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாம்பழங்களை ரசாயனங்களின் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்து வருவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது.

இதன் அடிப்படையில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மாம்பழ சாலை பகுதியில் மொத்த விற்பனை செய்யும் 5 மாம்பழ குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் ஒரு குடோனில் மட்டும் 5 ஆயிரத்து 270 கிலோ மாம்பழம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எத்திலின் ஸ்பிரே என்ற செயற்கை ரசாயனம் மூலமாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை குழுவினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், இது குறித்து உணவு பாதுகாப்பு பாதுகாப்பு துறை அலுவலர் ரமேஷ் பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், “வருங்காலத்தில் இது போன்ற தொடர் சோதனைகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் மற்றும் பழங்களை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகளும் பழங்களை பழுக்க செயற்கை ரசாயனங்களை பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது போன்று ரசாயனம் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைப்போர் மீது உணவு பாதுகாப்புத் துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப் பூர்வமாக இரண்டு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, உணவு பகுப்பாய்வுக்காக சென்னை கிண்டி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கெமிக்கல் மூலமாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அரியமங்கலத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைத்து முற்றிலும் அழிக்கப்பட்டன.

துறையூர் பகுதியில் எத்திலின் ஸ்பிரே மூலமாக பழுக்க வைக்கப்பட்ட 15 வாழைப்பழத்தார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது போன்று ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்த பழங்கள் அனைத்தும் உடல் நலத்துக்கு கேடு விளைவித்து தீங்கு ஏற்படுத்தி நோயை உண்டாக்கும் பழங்களை இயற்கையான முறையில் பழுக்க வைத்து சாப்பிட வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:செயற்கை முறையில் பழுக்க வைத்த 16 ஆயிரம் கிலோ மாம்பழங்கள் பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details