தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதியின்றி செம்மண் அள்ளிய விவகாரம்: இருவர் கைது !

திருச்சி: மணப்பாறை அருகே அனுமதியின்றி செம்மண் அள்ளி கொட்டிய விவகாரத்தில் இருவர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.

2 people arrested for sand theft in manaparai
2 people arrested for sand theft in manaparai

By

Published : Nov 25, 2020, 6:05 AM IST

Updated : Nov 25, 2020, 5:36 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கல்பாளையத்தான்பட்டி பகுதியில் தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் நேற்று டிப்பர் லாரி மூலம் அனுமதியில்லாமல் அள்ளி வந்த செம்மண் கொட்டப்பட்டு வருவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், பொய்கைப்பட்டி வருவாய் (பொறுப்பு) கிராம நிர்வாக அலுவலர் சின்னத்தம்பி, பண்ணப்பட்டி மேல்பாக கிராம நிர்வாக அலுவலர் அஜித்குமார், மற்றும் பண்ணப்பட்டி வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

அதில், உரிய அனுமதியில்லாமல் செம்மண் அள்ளி, கொட்டி வந்ததை உறுதி செய்தனர். பின்னர் இதுகுறித்து மணப்பாறை காவல் துறையினருக்கு அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் டிப்பர் லாரி உரிமையாளர் தர்மராஜ் (வயது 24), லாரி ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் (வயது 27) ஆகிய இருவரையும் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது'

Last Updated : Nov 25, 2020, 5:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details