தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் தொடக்கம்!

திருச்சி : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க திருச்சியில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள்!

By

Published : Nov 11, 2020, 12:38 PM IST

ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அதிகளவு மக்கள் கூட்டம் வருவது வழக்கம்.

குறிப்பாக சென்னை, திருப்பூர், கரூர், கோவை மார்க்கத்தில் இருந்து அதிக அளவில் பயணிகள் தமிழ்நாட்டின் மையப்பகுதியாக கருதப்படும் திருச்சி வந்து செல்வர்.

இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, திருச்சியிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்காக, தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, இயக்கப்படும்.

அந்த வகையில், இன்று (நவ.11) திருச்சியில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த தற்காலிக பேருந்து நிலையங்களை திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் வேதரத்தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கன்டோண்மென்ட் வில்லியம்ஸ் ரோடு, சோனா மீனா திரையரங்கம் எதிரே அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும்.

புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மன்னார்புரம் செங்குளம் காலனி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு மன்னார்புரம் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த மூன்று தற்காலிக பேருந்து நிலையங்களும் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு செல்ல நகரப் பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கப்படும்.

இந்த தற்காலிக பேருந்துகள் நிலையங்கள் தீபாவளி பண்டிகை முடிந்து ஒரு சில நாள்கள் வரை செயல்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details