இது தொடர்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 14) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் முதுகலை (M.A. Tamil), ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை (Five year Integ. P.G. M.A Tamil) மற்றும் தமிழ் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
தமிழ் ஆய்வியல் நிறைஞர் வகுப்பு (M.Phil) - ரூ. 4600/-, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை - ரூ. 2400/-(Five year Integ. P.G. M.A Tamil), தமிழ் முதுகலை (M.A. Tamil) - கட்டணம் இல்லை (முழுமையாக இலவயம்) என இவற்றின் கட்டணம் நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கான விண்ணப்பங்கள் நிறுவன வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டுமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.