தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு திரையுலகினர் சார்பில் நினைவேந்தல் கூட்டம்!

சென்னை : தமிழ் இசையுலகின் 'கந்தர்வக்குரலோன்' எனப் புகழப்படும் மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

SPB-charan-family-and-friends-is-organising-an-condolence-prayer-meeting-for-spb
SPB-charan-family-and-friends-is-organising-an-condolence-prayer-meeting-for-spb

By

Published : Oct 1, 2020, 1:06 AM IST

உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி. கடந்த 25ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம்வந்த மூத்த கலைஞர் எஸ்.பி.பி. வெறும் பாடகராக மட்டுமல்லாது திரை நடிகராக, இசையமைப்பாளராக, திரைப்படத் தயாரிப்பாளராக தனது திரையுலகப் பயணத்தை தொடர்ந்தவராவார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு நேற்று (செப். 30) திரையுலகினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது. நடிகர்கள் கமல்ஹாசன், சிவக்குமார், இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக பங்கேற்று தங்களது நினைவஞ்சலியைச் செலுத்தினர்.

நடிகர் விஜய் சேதுபதி, பார்த்திபன், இயக்குநர் வெற்றிமாறன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு மரியாதை செய்தனர்.

திரையுலகினர் மட்டுமல்லாது மேடையிசைக் கலைஞர்கள் பலரும் அவருடைய மறைவுச் செய்தி வெளியானவுடன் கண்ணீர் மல்க தங்களுடைய இரங்கலைத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details