தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் கடை ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

திருச்சி : ரேஷன் கடையில் பணியாற்றிவரும் பெண் ஊழியரை தாக்கிய கூட்டுறவுச் சங்க செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : Oct 3, 2020, 9:46 PM IST

ரேஷன் கடை ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து திருச்சி ஆர்ப்பாட்டம் !
ரேஷன் கடை ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து திருச்சி ஆர்ப்பாட்டம் !

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதுக்குடி ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் சித்ரா.

கடந்த சில நாள்களாக இவருக்கும், இடும்பாவனம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் உலகநாதன் என்பவருக்கும் இடையே நிர்வாக ரீதியிலாக கருத்து வேறுபாடு நீடித்து வந்துள்ளதாக தெரிகிறது.

அண்மையில், இது தொடர்பாக ஏற்பட்ட வாய் தகராறில் உலகநாதன், பெண் ஊழியர் சித்ராவை கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (அக்.3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் அண்ணாதுரை, இணைச் செயலாளர் ஸ்ரீதர், மாநகரச் செயலாளர் சூரியநாராயணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரமேஷ், "ரேஷன் கடை ஊழியரை தாக்கிய கூட்டுறவு சங்க செயலாளர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் வரும் 9ஆம் தேதி அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும்" என்றார்.

இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் கலந்து கொண்டு நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details