தமிழ்நாடு

tamil nadu

எம். சாண்ட் என்ற பெயரில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனம் - நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு!

By

Published : Nov 4, 2020, 8:03 PM IST

மதுரை : ஆற்று மணல் கொள்ளை குறித்த விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரிய மனு தொடர்பான முழு ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

எம். சாண்ட் என்ற பெயரில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனம் - நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு!
எம். சாண்ட் என்ற பெயரில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனம் - நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த கிறிஸ்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "அம்பாசமுத்திரம் கிராமத்தில் எம் சாண்ட் எனும் பெயரில் ஆற்று மணல் எடுத்து கேரளாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மணல் கொள்ளையை தடுக்கக் கோரி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பூமி எம். சாண்ட் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், அந்நிறுவனத்தின் மீது 9.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை பூமி எம்.சாண்ட் நிறுவனத்தின் நிறுவன தலைவர் கைது செய்யப்படவில்லை. வழக்கை நீர்த்துப் போக வைக்கும் கண்துடைப்பு நிகழ்வாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை உயர் அலுவலர்களுக்கும் இந்த மணல் கொள்ளையில் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை கல்லிடைக்குறிச்சி காவல்துறை விசாரித்தால் விசாரணை முறையாக நடைபெறாது. எனவே, அம்பாசமுத்திரம் மணல் கொள்ளை வழக்கு விசாரணையை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (நவம்பர் 4) மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், "மணல் கொள்ளை தொடர்பான வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வந்தபோது, ஆற்று மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர்களில் எத்தனை நபர்கள் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் எத்தனை நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் ? வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களில் வழக்கின் முகாந்திரம் என்ன ? வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளிகள் ஏன் கைது செய்யப்படவில்லை ? இவர்களை கைது செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவை ? " என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

மேலும், வழக்கின் முழு விவரங்களையும் ஆவணங்களையும் காவல்துறை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 18ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details