தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர், கோவை என தொடரும் சாதியக் கொடுமைகள் - மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு!

கோவை : பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவரை பணிசெய்யவிடாமல் அச்சுறுத்தியது குறித்து கோவை ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர், கோவை என தொடரும் சாதியக் கொடுமைகள் - மனித உரிமை ஆணையம் வழக்கு பதிந்துள்ளது!
திருவள்ளூர், கோவை என தொடரும் சாதியக் கொடுமைகள் - மனித உரிமை ஆணையம் வழக்கு பதிந்துள்ளது!

By

Published : Aug 25, 2020, 5:34 PM IST

கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சரிதா. ஊராட்சி மன்றத் தலைவரான சரிதாவை, அலுவலகப் பணியாற்ற விடாமல் அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் தலைவர் கோவிந்தராஜுவின் உறவினரான பாலசுப்பிரமணியம் என்பவர் தடுப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

அத்துடன், பாலசுப்பிரமணியம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதாவை தலைவர் நாற்காலியில் உட்கார்ந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டயுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி டி.எஸ்.பி. விசாரணை நடத்தி வருவதாக செய்தி வெளியானது.

இந்த செய்தி அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்துள்ளது.

மனித உரிமை ஆணைய உறுப்பினரான சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஊராட்சி மன்ற கடமையை ஆற்ற விடாமல் தலைவர் சரிதா தடுக்கப்பட்டது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் 3 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details