இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்தை அடுத்த ஆதிச்சனூர் கிராமத்தில் கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த சுப்புராயன் என்பவரின் மகன் முருகன், மண்சரிந்து விழுந்து உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தை அடுத்த பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரின் மகன் கந்தசாமி, எதிர்பாராத விதமாக தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்தார்.
பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் இரங்கல்!
சென்னை : தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்தை அடுத்த திட்டவிளை பகுதியைச் சேர்ந்த முத்துநாயகம் என்பரின் மகன் ஏசுதாஸ், சாலை விபத்தில் உயிரிழந்தார். கிள்ளியூர் வட்டத்தை அடுத்த கிள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பரின் மகன் சிறுவன் ஜெர்சின், குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இவ்வாறாக பல்வேறு துயரச் சம்பவங்களில் எதிர்பாராத வகையில் உயிரிழந்த 25 நபர்களின் மறைவு குறித்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்துள்ளேன்.
மேற்கண்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 நபர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 25 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடுகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.