திருப்பூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் எல்.ஐ.சி முகவர் சங்க மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது சங்கத்தினர் வெளிநாடு சுற்றுலா செல்ல அவிநாசி சாலையில் உள்ள டிராவல் கிராப்ட் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டன் என்பவரை அணுகியுள்ளனர். முதல் கட்டமாக 35 பேர் மலேசியா சென்று வந்தனர். இந்நிலையில், அடுத்து 30 பேர் செல்ல திட்டமிடப்பட்டு ரூ.10 லட்சத்தை டிராவல் கிராப்ட் உரிமையாளரிடம் கொடுத்துள்ளனர்.
வெளிநாடு அழைத்து செல்வதாகக் கூறி டிராவல்ஸ் அதிபர் மோசடி
திருப்பூர்: உலக நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பலரிடம் ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள், டிராவல்ஸ் அதிபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதேபோல், காந்திநகர் பகுதியை சேர்ந்த சந்திர சேகர் என்பவர் குடும்ப சுற்றுலா செல்ல , பயண டிக்கெட் மற்றும் செலவுக்கு வெளிநாட்டு பணம் மாற்றி பெற என மொத்தம் ரூ. 28 லட்சம் கொடுத்துள்ளார். இந்நிலையில், டிராவல் உரிமையாளர், அவர்களை சுற்றுலா அழைத்து செல்லவும் இல்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, சுற்றுலா செல்ல ஒரு கோடிக்கும் மேல் பணம் கொடுத்துள்ளதாகவும், தங்கள் பணம் மற்றும் பாஸ்போர்ட் ஆவணங்களை மீட்டுத்தரக்கோரி 10க்கு மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.