தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்

திருப்பூர்: பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களுக்கு அதற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படாததைக் கண்டித்து, விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

strike

By

Published : Apr 4, 2019, 3:56 PM IST

Updated : Apr 4, 2019, 4:43 PM IST


திருப்பூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களுக்கான ஊதியம் இன்னும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

எனவே, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் இழுத்தடிப்பு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

அதேபோல், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்காததால் இந்த விவகாரம் பூதாகரமாய் வெடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சார்ந்த ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

ஜாக்டோ ஜியோ

இதனால், திருப்பூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

Last Updated : Apr 4, 2019, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details